காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கல்வித் துறை அமைச்சர் காமராஜரிடம் நம்மிடம் மெடிக்கல் சீட் இரண்டு தான் உள்ளது ஆனால் 10 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கூறியுள்ளார். அதற்கு காமராஜர் அப்பா கையெழுத்து போடும் இடத்தில் யார் கைநாட்டு வைத்துள்ளார்களோ அவர்களுக்கு அந்த இரண்டு மெடிக்கல் சிட்டையும் கொடுத்துவிடு என்று கூறியுள்ளார். அதற்கு கல்வித் துறை அமைச்சர் பணம் கொடுத்து நிறைய பேர் மெடிக்கல் சீட்டு கேட்டு உள்ளார்களே அவர்களுக்கு என்ன செய்வது என்று சொல்லி உள்ளார். அதற்கு காமராஜ் காசு கொடுத்து மெடிக்கல் சீட்டு கேட்கும் நபர்களுக்கு எதற்கு கொடுக்க வேண்டும் கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்தால்தான் அவன் குடும்பமும் வளரும் இந்த நாடும் வளரும் என்று கூறியுள்ளார்.

