2024 கோடை காலத்தில் 105 டிகிரியை தாண்டி இந்தியாவில் வெயில் அடிக்கிறது. இதற்கு மத்திய நீர் ஆணையம் ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது தென் மாநிலங்கள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு இந்த மாநிலங்களில் இருக்கிற நீர் தேக்கங்களில் 17 சதவீதம் மட்டுமே நீர் உள்ளது. 10 ஆண்டுகள் காணாத தண்ணீர் பஞ்சம் இந்த ஆண்டு ஏற்படும் என எச்சரிக்கை கொடுத்துள்ளது மத்திய நீர் ஆணையம். இதில் தமிழ்நாட்டில் மிகவும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

